மோடியின் ஆட்சியில் இந்தியாவின் மதிப்பு உலகளவில் கூடி இருக்கிறது: பாரிவேந்தர்
கூட்டத்தில் பேசும் பாரிவேந்தர்
பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.திருச்சி மாவட்டம்ஜலால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று உரையாற்றிய பாரிவேந்தர் இந்தியாவின் மதிப்பு உலக அளவில் கூடி இருக்கிறது. மோடியின் ஆட்சி, நாட்டுப்பற்று, அன்பால் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை , பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளார். 5 வது இடத்தில் இருக்கும் இந்தியாவை 3 ம் இடத்திற்கு கொண்டு வருவதற்காக மோடி இரவு, பகல் பாராது உழைத்து வருகிறார்.
அமைச்சர் K.N. நேரு, சேர்த்து வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துகள் தான்.அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்து இருக்கிறது. கடந்த 50 வருட காலமாக நான் (பாரிவேந்தர்) கல்வி சேவை ஆற்றி வருகிறேன். கல்விச் சேவையை காட்டிலும் அகண்ட தளமொன்று உள்ளது. அதுதான் அரசியல். ஊழல்,லஞ்சத்தை ஒழிக்கலாம், கல்வி தரத்தை உயர்த்தலாம், நல்ல மருத்துவமனை கட்டித்தரலாம். நல்ல அரசியல்வாதிகளை உருவாக்கலாம் என்ற அடிப்படையில் தான் என்னை போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் கடந்த கடந்த 50 ஆண்டு காலத்தில் மிஞ்சியது லஞ்ச ஊழல் தான்.குடும்ப அரசியல் நடத்தும் திராவிடத் தலைவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. எனது சொந்த நிதி 126 கோடி ரூபாயை பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு செலவிட்டுள்ளேன். 1200 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியுள்ளேன். அந்த திட்டம் இவ்வாண்டும் தொடரும். வருடத்திற்கு ஆயிரம் முதல் 2000 பேருக்கு இலவச மருத்துவ சிசிச்சை வழங்கி வருகிறேன்.
வரும் ஆண்டிலும் இத்திட்டம் தொடரும் லால்குடியில் கேந்த்ரிய வித்யா (KV ) பள்ளி அமைய பாடுபடுவேன். ஹிந்தி படிக்க இயலாய் செய்தவர்கள் திராவிடத் தலைவர்கள் தான் KV வந்தால் அனைவரும் இந்தி பயில வாய்ப்பு கிட்டும் என்றார்.