அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன வீடு!

அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன வீடு!

அலட்சியம்

அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் ரூ.2 லட்சம் மதிப்பிலான வீடு பொருட்கள் சேதமடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மலையாண்டி கோவில் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதனை அகற்றும்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் பெறப்பட்டவுடன் அதனைப்பற்றி எதுவும் முழுவதுமாக விசாரிக்காமல்,ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான எந்த நோட்டீஸும் முறைப்படி வழங்காமலும் ராஜா என்பவரது வசிப்பிட இடத்திற்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்ற இந்து சமய அறநிலையத்துறையினர், வருவாய்துறையினர ,காவல்துறை பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்துடன் ராஜா என்பவர் இடத்திற்கு சென்றுள்ளனர்.

விவரம் அறியாத ராஜா அதிகாரிகளை கண்டு அச்சமடைந்து எதுவும் விசாரிக்காமல், அவருடைய இடத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு,மாடுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுடன் வெளியே சென்றவுடன் அறநிலையத்துறை அதிகாரிகள், அவருடைய குடியிருப்பை முழுவதுமாக அகற்றினர். அவருடைய உறவினர்கள் மூலமாக அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் அதனால் அதனை அகற்றியதாகவும் தெரிவித்து அதற்கான நோட்டீசை வழங்கியுள்ளனர்.

அந்த நோட்டீசை பார்த்த பொழுது ஆக்கிரமிப்பு இருந்த இடத்தின் சர்வே எண்ணும் ராஜா இருந்த இடத்தின் சர்வே எண்ணும்,வேறு வேறு என தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜா அதிகாரிகளிடம் கேட்ட பொழுது அவர்கள் எதுவும் பதில் அளிக்காமல் அந்த இடத்தைவிட்டு விலகி சென்றனர். அதிகாரிகள் தவறுதலாக ஆக்கிரமிப்பை அகற்றியதில் ராஜாவின் சுமார் 2 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு பொருட்கள் முழுவதும் சேதம் அடைந்தது.

எனவே முழுவதும் விசாரிக்காமல் தவறுதலாக ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜாவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story