இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடிய காங்கிரசார்


இந்திரா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்
குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடந்தது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சுப்ரமணியம், நக்கீரன், சொக்கலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஆதிசேஷன் தலைமையில், அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்திராவின் திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்குள்ள ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர துணை தலைவர் சிவகுமார், மாவட்ட செயலர் கோகுல்நாத் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story


