இந்திராகாந்தி பிறந்தநாள் - நோயாளிகளுக்குக் காங்கிரஸ் கட்சியினர் உணவு
நோயாளிகளுக்கு உணவு
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அரூர் அரசு மருத்துவமனையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பால்,பழங்கள் மற்றும் ரொட்டிகள் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்டுமான அமைப்பு சாரா பிரிவின் தர்மபுரி மாவட்ட தலைவர் இம்ரான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் அகமது, மாவட்ட துணை செயலாளர் நவ்ஷாத், ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் அக்பர்ஷெரிப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ் பயாஸ் சுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story