இந்திரவனம் பச்சையம்மன் ஊஞ்சள் தாலாட்டு - பக்தர்கள் சாமி தரிசனம்
இந்திரவனம் பச்சையம்மன் ஊஞ்சள் தாலாட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்திரவனம் பச்சையம்மன் ஊஞ்சள் தாலாட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சேத்துப்பட்டு சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் அருள்மிகு பச்சையம்மன் கோவில் கார்த்திகை மாத பவுர்ணமி ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் வனப்பகுதியில் உள்ள அருள்மிகு பச்சையம்மன் கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமி முன்னிட்டு பச்சையம்மனுக்கும், விநாயகர், முருகன், வாமுனி, செம்முனி, விலாட முனி, கரி முனி, முத்து முனி, ஜடாமுனி, வேதமுனி, ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது. மாலை பச்சையம்மன் மலர்களால் அலங்கரிக்ப்பட்டு ஊஞ்சல் தாலாட்டு மண்டபத்தில் தாலாட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு போளூர், ஜமுனாமரத்தூர் உள்படபல்வேறு பகுதியிலிருந்து திழரான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். .
Tags
Next Story