புத்தொழில் புத்தாக்க இயக்கம் பயிற்சி வகுப்பு
இந்திய அரசின் அட்டல் இன்னொவேஷன் மிஷன் மூலமாக குமரி மாவட்டம் இலவுவிளை, பகுதியில் உள்ள மார் எப்ரேம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 கோடி நிதியுதவியோடு உருவாக்கப்பட்டுள்ள, எ சி ஐ சி மார் எப்ரேம் இன்குபேஷன் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், பார்வையிட்டார்.
தொடர்ந்து, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், திருநெல்வேலி மண்டலம் சார்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த இன்குபேஷன் மையங்களின் மேலாளர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாமையும் தொடக்கி வைத்து பேசினார். இந்த முகாமில் ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த 25 இன்குபேஷன் மையங்களைச் சார்ந்த மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த காணி பழங்குடியினரின் புத்தொழில் நிறுவனமான நாஞ்சில்நாடு காணி பழங்குடியின பெண்களின் "நாஞ்சில் நாடு காணி பெண்கள் கிறியேசன்ஸ்" பங்குதாரர்களோடு உரையாடினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க அலுவலர்கள் என்.ராகுல், ஜிஜின்துரை, மார் எப்ரேம் இன்குபேஷன் மைய இயக்குநர், முனைவர் லெனின் ப்ரட், அணீஸ், பிரித்தி, பயிற்றுநர்கள், பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.