ஒரகடம் வனப்பகுதியில் தொழிற்சாலை கழிவுகள் எரிப்பு

ஒரகடம் வனப்பகுதியில் தொழிற்சாலை கழிவுகள் எரிப்பு

ஒரகடம் வனப்பகுதியல் பிளாஸ்டிக் கழிவுகளை மலை போல கொட்டி தீயிட்டு கொளுத்துவதால், அதிலிருந்து வெளியேறும் கரும் புகையினால், கிராம மக்கள் அவதியுறுகின்றனர்.


ஒரகடம் வனப்பகுதியல் பிளாஸ்டிக் கழிவுகளை மலை போல கொட்டி தீயிட்டு கொளுத்துவதால், அதிலிருந்து வெளியேறும் கரும் புகையினால், கிராம மக்கள் அவதியுறுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஒரகடம் தொழிற்பூங்காவில் 180க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 100 கன்டெய்னர் லாரிகள் வாயிலாக கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் மூலப்பெருட்கள், பெரும்பாலுாம் பிளாஸ்டிக் பைகில் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், மூலப்பொருட்களில் பயன்பாட்டிற்கு பின், தொழிற்சாலையில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேறுகின்றன.

தொழிற்சாலை இதை முறையாக கையாள வேண்டும். இருப்பினும், உள்ளூர் முக்கிய புள்ளிகள் உதவியுடன், பிளாஸ்டிக் கழிவுகளை இரவு நேரங்களில் லாரிகள் வாயிலாக கொண்டு சென்று, வனப்பகுதிகளில் கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். ஒரகடம் அடுத்த, பண்ருட்டி, குன்னவாக்கம் இடைபட்ட வனப்பகுதியில் மலை போல கொட்டி, தீயிட்டு எரிக்கின்றனர். இவை, காட்டுத் தீ போல கொழுந்து விட்டு எரிகிறது. மேலும், இதில் இருந்து வெளியேறும் கரும் புகயைால், பண்ருட்டி, குன்னவாக்கம், மேட்டுப்பாளையம், எச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள், கண் எரிச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்னையால் அவதி அடைகின்றனர்.

Tags

Next Story