தொற்றா நோய்க்கான சிகிச்சை முகாம்!

தொற்றா நோய்க்கான சிகிச்சை முகாம்!

சிகிச்சை முகாம்

அகவலம் ஊராட்சியில் உள்ள பொது மக்களுக்கு தொற்றா நோய்க்கான சிகிச்சை முகாம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே அகவலம் ஊராட்சியில் தொற்றா நோய்க்கான சிகிச்சை முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் ஆஷா மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். இதில் தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய், கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், காசநோய், தொழுநோய், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு உள்ளிட்டவைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு மருத்துவ அலுவலரால் சிகிச்சை பெறும் முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று அவ்வப்போது ஆலோசனைகள் பெற்றுக்கொள்ள நோயாளிகளுக்கு அறிவுறுத்தபட்டது. முகாமில் பனப்பாக்கம் அரசு டாக்டர் சவீதா, ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் மீரா விநாயகம், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன், விமல்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story