அரசு பட்டுக்கூடு அங்காடியில் வரத்து சரிவு

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் வரத்து சரிந்த நிலையில், ரூ 10. 31 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையாகின.
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங் களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். உற்பத்தி குறைந்ததால் அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து குறைந்தது. நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து தர்மபுரி அங்காடிக்கு நேற்று 2,226 கிலோ பட்டுக் கொடுகளை கொண்டு வந்தனர். 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக 505 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக ரூ.369-க்கும், சராசரியாக 463.10 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 10 லட்சத்து 31 ஆயிரத்து 262 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story