தகவல் பேனர் கிழிப்பு: போலீசார் விசாரணை

பேனர் கிழிக்கப்பட்ட பலகை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிறன்று புதிய திராவிட கழகம் மற்றும் வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நல சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதற்கு முன்னதாக பள்ளிபாளையம் அடுத்துள்ள சின்னார் பாளையம் என்ற பகுதி அருகே புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் புதிதாக கட்சி கொடி கம்பம் ஏற்றப்பட்டு தகவல் பலகை திறப்பு விழா நிகழ்வானது நடைபெற்றது இந்நிலையில் நேற்று காலை தகவல் பலகை பேனரை இரவோடு இரவாக, மர்ம நபர்கள் கிழித்ததாக தெரிகிறது.
காலை அவ்வழியே சென்ற புதிய திராவிட கழக கட்சி நிர்வாகிகள், தகவல் பலகை பேனர் கிழிக்கபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புதிய திராவிட கழக கட்சி மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் கூறும்பொழுது, பள்ளிபாளையம் குமாரபாளையத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஞாயிறன்று, வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நல சங்கத்தின் சார்பிலும், புதிய திராவிட கழக கட்சியின் சார்பிலும், பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் மற்றும் தகவல் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில் குறிப்பிட்ட இந்த சின்னார் பாளையம் என்ற பகுதியில் மட்டும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது ..இது குறித்து வெப்படை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம் . இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினார்......
