தி நவோதயா அகாடமி பள்ளியில் வணிகவியல் துறை சார்ந்த விளக்கக் கூட்டம்

தி நவோதயா அகாடமி பள்ளியில் வணிகவியல் துறை சார்ந்த விளக்கக் கூட்டம்

நாமக்கல் தி நவோதயா அகாடமி பள்ளியில் வணிகவியல் துறை சார்ந்த விளக்கக் கூட்டம்

நாமக்கல் தி நவோதயா அகாடமி பள்ளியில் வணிகவியல் துறை சார்ந்த விளக்கக் கூட்டம்
நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 11 ஆம் வகுப்பில் சிறந்த பாடபிரிவுகளை தெரிவு செய்யும் வண்ணம் வணிகவியல் துறைசார்ந்த மேற்படிப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய விளக்ககூட்டம் பள்ளி கலையரங்கில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பட்டயக் கணக்காளர் முனைவர் நாகராஜன் தலைமை வகித்து வணிகவியலின் முக்கியத்துவம், வணிகவியல் கற்று உலக, தேசிய அளவில் சாதித்த பெரும் பணக்காரர்கள், வணிகவியலில் உள்ள சிறப்பு பிரிவுகளான CA, CMA, CS போன்றவைகளை கற்பதற்கான எளிய முறைகள், உலக, தேசிய மற்றும் மாநில அளவில் மேற்கூறிய பாட பிரிவுகளில் சிறந்த கல்லூரிகளின் பட்டியல் மற்றும் அவைகளில் சேருவதற்கான நடைமுறைகள் பற்றி விளக்கி கூறினார். கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் என பலரும் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறையினர் செய்திருந்தனா்.

Tags

Next Story