மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியை துவக்கினர். முன்னதாக மகளிர் திட்ட துறை வட்டார அளவிலான களப்பணியாளர்களுக்கு பிரத்யேக செயலியுடன் கூடிய மொபைல் மூலம் மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களின் தரவுகளை பதிவு செய்யும் வகையில் பயிற்றுனர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு கிராமப்புற கணக்கெடுப்பாளர்களுக்கு, மகளிர் திட்ட வட்டார அலுவலகங்களில் நடத்தப்பட்டது.
Next Story