மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகளை அனுப்பும் பணி துவக்கம்

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகளை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி துவக்கம்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஒட்டி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்து சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணி னியின் மூலம் (Randomization) தேர்வு செய்து அனுப்பும் பணியினை துவக்கி வைத்து பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக கணினியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,121 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,808 கட்டுப்பாட்டுக்கருவிகளும், 2,186 VVPAT கருவிகளும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags

Next Story