தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி துவக்கம்
நத்தம் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்
தமிழகம் முழுவதும் காலநிலை மற்றும் மழை அளவு ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும், தேவையான இடங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் புதியதாக 54 தானியங்கி மழைமானிகள் மற்றும் 6 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக நத்தம் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story