அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி துவக்கம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவிகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் கா.கலாராணி தலைமையேற்று துவக்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.முருகேசன் முன்னிலை வகித்து பேசுகையில், "தற்காப்புக் கலையின் சிறப்புகள், மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது" என்று எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில், பள்ளி தலைமையாசிரியர் வாசுகி, ஆசிரியர் பயிற்றுனர் சரவணன், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், தமிழரசன், மணிமேகலை, இளவரசி, காயத்ரி, சண்முகப் பிரியா மற்றும் ரஞ்சனி ஆகியோர் கலந்து கொண்டனர். கராத்தே பயிற்சியாளர் பிரபு மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளித்தார்.
Next Story