புதிய தொழில் முனைவு திட்டங்கள் தொடக்கம்
மாவட்ட ஆட்சியர்
புதிய தொழில் முனைவு திட்டங்கள் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலம் புதிய தொழில் முனைவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தகவல். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த வாழ்வாதார திட்டங்களை முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் அறிந்து, பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story