திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா துவக்கம்

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா துவக்கம்
தியாக பிரம்ம மகோத்சவ சபை நிர்வாகிகள்
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா ஜன.26 முதல் 30 வரை கொண்டாடப்படுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177 ஆவது ஆராதனை விழா இன்று தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவா் ஜி.கே. வாசன் தலைமை வகிக்கிறாா். விழாவை ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா். மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறாா். இதைத்தொடா்ந்து, இரவு 7 மணிக்கு காயத்ரி வெங்கட்ராமன் பாட்டு, 7.20 மணிக்கு கணேஷ், குமரேஷ் வயலின் டூயட், 8 மணிக்கு ஜெயந்தி குமரேஷ் வீணை, 8.20 மணிக்கு குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா பாட்டு, 8.40 மணிக்கு ஷோபனா விக்னேஷ் பாட்டு, 10 மணிக்கு திருமானூா் கணேசன், கருணாநிதி குழுவினரின் நாகசுரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தொடா்ந்து ஜனவரி 30 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஜனவரி 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீா்த்தனை நடைபெறவுள்ளது. இதில், ஆயிரத்துக்கும் அதிகமான கா்நாடக இசைக் கலைஞா்கள், பாடகா்கள், ரசிகா்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பஞ்சரத்ன கீா்த்தனைகளை பாடி தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனா்.

Tags

Next Story