ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகள் துவக்கம்

ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகள் துவக்கம்

பணிகள் துவக்கம் 

கந்திலி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ/50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.

திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நல திட்ட பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சி. என்.அண்ணாதுரை,திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர். நலத்தம்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கலந்து கொண்டு திட்ட பணிகளை துவக்கி வைத்தார். விசமங்கலம் பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி ,மையத்தை திறந்து வைத்தார் பின்னர் சித்தேரி பகுதியில் உள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 30,000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 14லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதை திறந்து வத்தார்.

பின்னர் மேற்கத்தியானூர் மற்றும் கீழ்குப்பம், வெங்களாபுரம், பள்ளிப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க மற்றும் முத்தம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க மற்றும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் மற்றும் தண்ணீர் பந்தல் அருகே பேருந்து நிறுத்தம் நிழற்கூட கட்டிட பணிகளுக்காக பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் பங்கேற்று நல திட்டபணிகளை துவக்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய சேர்ன்மன் திருமதி திருமுருகன் ,ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன் மற்றும் ஒன்றிய துணை சேர்மன், மோகன்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கட்சி நிருவாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story