சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவக்கம்
வனவிலங்கு கணக்கெடுப்பு
ஒவ்வொரு ஆண்டும் வனப்பகுதியிலுள்ள வனவிலங்குகளை கணக்கெடுப்பு வழக்கம். அதன்படி மழைக்கு பிந்திய கணக்கெடுக்கும் பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் இன்று தொடங்கியது . சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர், சத்தியமங்கலம் , டி. என்.பாளையம் , தாளவாடி , ஆசனூர் , விளாமுண்டி , கடம்பூர், கேர்மாளம் , தலைமலை , ஜீரகள்ளி ஆகிய 10 வனசரகங்களில் மழைக்கு பிந்திய வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. ஒரு குழுவிற்க்கு 5 பேர் வீதம் 300 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு , வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளின் காலடி தடம், உருவ அமைப்பு , நேரடியாக பார்வையிட்டு என பல்வேறு முறைகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவர்.
Next Story