சாலை விபத்தில் காயம் அடைந்தவர் உயிரிழப்பு
பைல் படம்
மாத்துார் அருகே நடந்து சென்ற போது மீது சரக்கு வாகனம் மோதியதில் காயமடைந்த காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விராலிமலை ஒன்றியம் மாத்துார் அருகே உள்ள கும்பக்குடியை சேர்ந்தவர் அன்புராஜ்(64). தனியார் நர்சிங் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 29ம் தேதி அதிகாலை திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு சைக்கிளில் மாத்துார் போலீஸ் பீட் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சரவணன்(35) என்பவர் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக காவலாளி அன்புராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று மாலை உயிரிழந்தார். மாத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story