மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிய இன்னர் வீல் சங்கம்

X
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சக்கர நாற்காலிகள்
குமாரபாளையம் இன்னர் வீல் சங்கத்தார் சார்பில் மாற்றுத்திறனுடையோர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை பகுதியில் சம்பூரணியம்மாள் மாற்றுத்திறனுடையோர்களுக்கான இலவச பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள 7 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இன்னர் வீல் சங்கத்தார் சார்பில் ஒரு லட்சம் மதிப்பிலான 7 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளி நிர்வாகி ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மகேந்திரன், சங்க நிர்வாகிகள் ரமேஸ்வரி, தீபா, சந்தானலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
