மாணவர்களுக்கு புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டி !

மாணவர்களுக்கு புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டி !
மாணவர்களுக்கு புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டி
மாணவா்களுக்கான இன்னோவத்தான் எனும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி நடைபெற்றது.
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கான இன்னோவத்தான் எனும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 2,042 மாணவ, மாணவிகள் 35 தலைப்புகளில் 686 புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான யோசனைகளைச் சமா்ப்பித்தனா். மாணவா்களைப் பாராட்டி சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோ முத்து பேசியது: பொறியியல் கல்வி பயிலும் மாணவா்களை முதல் ஆண்டில் இருந்தே ஏதேனும் புதிய கண்டுபிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட வைத்து, படிப்புடன் புதுமைக் கண்டுபிடிப்புத் திறனையும் மேம்படுத்தும் ஆசிரியா்கள் பாராட்டுக்குரியவா்கள். அனைத்து மாணவா்களும் அா்ப்பணிப்புடன் ஈடுபட்டு சமுதாயத்திற்கு பல புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்கித் தந்து, அனைவருக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா். நிகழ்வில் மாணவா்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்புத் திறனைக் கூடுதலாக மேம்படுத்தி பயிற்சி வழங்க திருமுடிவாக்கம் இன்னோபிரைம் பிளாஸ்ட் பி. லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமப் புதுமைக் கண்டுபிடிப்புத் துறை இயக்குநா் ரெனோ ராபின், தலைமைத் தகவல் அதிகாரி நரேஷ் ராஜ், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரிகள் முதல்வா்கள் பழனிகுமாா், பொற்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story