தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் கல்வெட்டு தரிசனம்
காசி விசுவநாதர் கோவிலில் பாண்டிய கல்வெட்டுகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காசி விசுவநாதர் கோவிலில் பாண்டிய கல்வெட்டுகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி நகரில் உள்ள காசி விஸ்வநாதன் கோவில், உலகம்மன் கோவில் அல்லது தென்காசி பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிறது. இதில் கிபி.1445-1446 இல் பரக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. சிற்றாறு எனும் ஆற்றங்கரையில் இக்கோவில் உள்ளது. இக்கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பகுதியில் இருந்தும் தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story