மாணவர்களுக்கு கல்வெட்டு பயிற்சி

மாணவர்களுக்கு கல்வெட்டு பயிற்சி

கல்வெட்டு பயிற்சி 

கள்ளக்குறிச்சியில் மாணவர்களுக்கு கல்வெட்டு பயிற்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம், கபிலர் தொன்மை ஆய்வு மையம் சார்பில் மாணவர்களுக்கு கோடைகால கல்வெட்டுப் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கல்வெட்டுகளை படிப்பது, படிஎடுப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ஸ்தனிஸ்லாஸ் வரவேற்றார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் கலியபெருமாள், தமிழ் சங்கத் துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கபிலர் தொன்மை ஆய்வு மைய தலைவர் உதியன், வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறை சுவற்றில் உள்ள கல்வெட்டுகளை படித்து அதில் சொல்லப்பட்ட தகவல்களை மாணவர்களுக்கு விளக்கி, படி எடுப்பது குறித்து விளக்கினார்.

மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

Tags

Next Story