நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல் - விவசாயிகள் பரிதவிப்பு

நெல் பயிர்களில் பூச்சி தாக்குதல் - விவசாயிகள் பரிதவிப்பு
நெல் வயலில் பூச்சி மருந்து அடிக்கும் பணி
தஞ்சை மாவட்டத்தில், சம்பா, தாளடி நெல் வயல்களில் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர், ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான இயக்கத்தில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவைகளில் இப்போது நிலவி வரும் மப்பும், மந்தாரமுமான காலநிலை காரணமாக பயிர்களில் வயதை பொறுத்து இலை சுருட்டு புழு, குருத்துப் பூச்சி, ஆனைக் கொம்பன் ஆகியவற்றின் தாக்குதல் தென்படுகிறது.இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் தடுமாறி வருகின்றனர்.

கூடுதல் விலை கொடுத்து தனியார் உர விற்பனை மையங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி தெளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வேளாண் துறை அதிகாரிகள் வயல்வெளி பரப்புகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து பூச்சிகளை கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை அடையாளப்படுத்தி அதனை போதிய அளவு வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேளாண் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பூச்சி தாக்குதலால் பயிர் மகசூல் குறையும் என அச்சத்திலும் விவசாயிகள் உள்ள நிலையில், வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

Tags

Next Story