பாதாள சாக்கடை அமைக்க வலியுறுத்தல்

பாதாள சாக்கடை அமைக்க வலியுறுத்தல்

பாதாள சாக்கடை

பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவு நீரால், சாலையும் சேதமடைகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், வீட்டில் உள்ள காலி இடம் உள்ளவர்கள், தோட்டம் அமைத்து, செடி, கொடிகளுக்கு வீட்டு உபயோக கழிவுநீரை பயன்படுத்தி வருகின்றனர். இடவசதி இல்லாதவர்கள், வீட்டிற்கு வெளியே தொட்டி அமைத்து அதில் கழிவுநீரை விடுகின்றனர். தொட்டியில் சேகரமாகும் கழிவுநீரை முறையாக அகற்றாததால், தொட்டி நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவு நீரால், சாலையும் சேதமடைகிறது. எனவே, வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டெம்பிள் சிட்டியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story