கால்நடை குடிநீர் தொட்டிக்கு குழாய் அமைக்க வலியுறுத்தல்

கால்நடை குடிநீர் தொட்டிக்கு குழாய் அமைக்க வலியுறுத்தல்

மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாத நிலையில் இருக்கும்குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாத நிலையில் இருக்கும்குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சியில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2018 - 19ல் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், கால்நடை தொட்டியில் தண்ணீர் நிரப்ப குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாத நிலையில் குடிநீர் தொட்டி வீணாகி வருகிறது. எனவே, கால்நடை தொட்டிக்கு குடிநீர் குழாய் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story