ஏகாம்பரநாதர் கோவில் பிரகாரத்தில் கூலிங் பெயின்ட் அடிக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கோவில் வெளி பிரகாரத்தில் கூலிங் பெயின்ட் அடிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு கோடை வெயிலின்போது, கோவில் வெளி பிரகாரத்தில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதங்கள் சுடாமல் இருக்க, தரையில் 'கூலிங் பெயின்ட்' அடிக்கப்பட்டது. அந்த பெயின்ட் பூச்சுகள் ஆங்காங்கே உதிர்ந்த நிலையில் உள்ளது.
தற்போது, காஞ்சிபுரத்தில் தினசரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், கோவில் பிரகார தரையில் உள்ள சூடு காரணமாக, பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பக்தர்களின் பாதங்களில் கொப்பளம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பக்தர்களின்பாதங்களை பாதுகாக்கும்வகையில், கோவில் வெளி பிரகாரத்தில் 'கூலிங் பெயின்ட்' அடிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது: கோவில் பிரகார தரையில், 'கூலிங் பெயின்ட்' அடித்தாலும், அதிக வெயிலின்போது, பக்தர்களின் பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பிரகாரத்தில் 'கார்பெட்' அமைக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்."
Tags
- காஞ்சிபுரம்
- ஏகாம்பரநாதர் கோவில்
- கூலிங் பெயின்ட்
- அரசியல்
- சினிமா
- கிரைம்
- அயலக தமிழர்கள்
- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- விளையாட்டு
- வேலைவாய்ப்பு
- ஆன்மீகம்
- உடல்நலம்
- சமையல்
- தொழில்நுட்பம்
- ஆட்டோமொபைல்
- சுற்றுலா
- வீடியோ
- உதயநிதி ஸ்டாலின்
- சனாதனம்
- பதவி விலகல்
- உயர்நீதிமன்றம்
- கூட்டணிப் பேச்சு வார்த்தை
- கூட்டணியில் இருந்து விலகல்
- நாடாளுமன்றத் தேர்தல்