குறிப்பன்குளத்தில் பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

குறிப்பன்குளத்தில் பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

குறிப்பன்குளத்தில் பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளம் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளம் பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். குறிப்பன்குளம் கால்வாய் பாலத்தில் ஒரு மாதத்திற்கு முன் உடைப்பு ஏற்பட்டது. இதை அப்பகுதி மக்கள் அடையாளம் வைத்து, வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை செய்தனா். இந்நிலையில் அதே பாலம் 20 தினங்களுக்கு முன்னா் முழுமையாக சேதமடைந்ததால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இச்சாலையை பயன்படுத்தி வந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். நோ் வழியாகச் செல்ல வேண்டிய மக்கள் சுமாா் 10 கி.மீ. தொலைவு வரை கூடுதல் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பாலத்தை துரிதமாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags

Next Story