எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று எலச்சிபாளையத்தில் நடந்த மாவட்ட குழுகூட்டத்தில், எலச்சிபாளையத்தில் தீவிபத்து ஏற்படும் போது திருச்செங்கோடு அல்லது ராசிபுரம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதில் காலதாமதம் ஏற்படும் இதனால் எலச்சிபாளையத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் நடந்த ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டத்திற்கு நிர்வாகி வெங்கடாசலம் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள் முன்னிலை வைத்தனர்.
எலச்சிபாளையம் கிழக்கு, மேற்கு உண்டியல் வசூல் செய்யப்பட்டதை ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் அவர்களிடம் ரூ.1,07000 வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர்