கடையை காலி செய்ய வலியுறுத்தல் - மாற்று இடம் கேட்டு மாற்றத்திறனாளி மனு
மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி
பெரம்பலூர் மாவட்டம் பில்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்ற மாற்றுத்திறனாளி கிராம மக்கள் உதவியுடன் டிசம்பர் 4-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதனை தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், பில்லங்குளம் பேருந்து நிலையம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இட உரிமையாளரிடம் அக்ரிமெண்ட் செய்து சைக்கிள் கடை வைத்து பிழைப்பு செய்து வருகிறேன், தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் நடத்தி வந்த கடையின் அருகே பொது இடத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், நான் நடத்தி வந்த சைக்கிள் கடையை இங்கு நடத்தக்கூடாது என சொல்லியதால் நானும் கடை காலி செய்து விடுகிறேன் என தெரிவித்து விட்டேன் ஆனால் வேறு ஒரு இடத்தில் கடை வைத்தால் அங்கும் நடத்தக்கூடாது என தடுத்து வருகின்றனர், எனவே மாற்றுத்திறனாளியான நான், பிழைப்புக்காக சைக்கிள் கடை வைத்து கொள்ள அனுமதி கேட்டும் மேலும் தனக்கு ஒரு இடத்தை வழங்க கேட்டு கோரிக்கை மனுவை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ளதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story