வேளாண்மைதுறை அதிகாரிகள் ஆய்வு

வேளாண்மைதுறை அதிகாரிகள் ஆய்வு

வேளாண் அதிகாரிகள் ஆய்வு

நெல்பயிருக்கான மாதிரி செயல்விளக்க திடல் ஆய்வில் விவசாயிகள் வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
வேளாண்மை செயலாளர் மற்றும் உற்பத்தி ஆணையர், வருவாய் கிராமங்கள்தோறும் பிரதான பயிருக்கு 5 முதல் 10 ஏக்கர் வரையில் மாதிரி செயல்விளக்க திடல் அமைத்திடுமாறு அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியநாகலூர் கிராமத்தில் நெற்பயிருக்கான செயல்விளக்க திடல் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கபட்டுள்ளது. இதனை வேளாண்மைதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தபடும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யபட்ட சிங்க் சல்பேட் போடப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் அறிகுறிகளை கண்காணித்து உரிய பரிந்துரை வழங்கிடுமாறு அனைத்து களப்பணியாளர்களுக்கும் அறிரை வழங்கபட்டது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி, வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி மற்றும் வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story