பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
பட்டுக்கோட்டை மதுக்கூர் சாலை வெண்டாகோட்டையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் தடுப்பணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு, சிடி ஸ்கேன் பிரிவு, பொதுஅறுவை சிகிச்சை பிரிவு, யோகா இயற்கை மருத்துவ பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆகியவற்றை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கும் விதம் குறித்து நேரில் பார்வையிட்டார். பட்டுக்கோட்டை நகராட்சி உத்தண்டிகுளம் மழைநீர் வாய்கால் பொதுப்பணித்துறை நீர்வளத் துறையின் நசுவினி ஆறு, மழைநீர் வடிகால், கண்ணனாறு பாலம் ஆகியவற்றை பார்வையிட்டு, பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்தஆய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, நகராட்சி ஆணையர் குமரன், பொதுப்பணித்துறை (நீர்வளம்) உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவிப் பொறியாளர் மணிகண்டன், நீர்வளத்துறை அக்னியாறு கோட்ட செயற்பொறியாளர் ஐயம்பெருமாள், வட்டாட்சியர் சுகுமார், நகராட்சி சுகாதார அலுவலர் நெடுமாறன், ஆய்வாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.