விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கோட்டநத்தம் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.3.42 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வருவதையும், வச்சக்காரப்பட்டியில் 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும்,

சத்திரெட்டியாபட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.19.38 இலட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், சிவஞானபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.17.62 இலட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story