கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு
கடலோர பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட எஸ் பி

கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு பொதுமக்கள்,சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் கடலோர பகுதிகளில் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கையை மீறி சில இளைஞர்கள் கடலில் குளிக்க சென்று துரதிஷ்ட வசமாக உயிர் இழந்தனர்.

காப்பாற்றபட்ட இளைஞர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் இன்று (06.05.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கணபதிபுரம் லெமூர் கடலோர பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்க்கொண்டு கடல்சீற்றம் அதிகமாக இருப்பதால் கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு சென்று கால் நனைக்கவோ, குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் கடல் அலையில் சிக்கி காப்பாற்றப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இளைஞர்களின் சிகிச்சை குறித்தும் அவர்களின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தடையை மீறி கடலோர பகுதிகளில் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story