சுகாதாரத் துறையினா் ஆய்வு !
சுகாதாரத் துறையினா் ஆய்வு
தியாகதுருகம் வட்டார மருத்துவ அலுவலா் ஸ்ரீராம் தலைமையிலான சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
தியாகதுருகம் வட்டம், வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த 6 போ் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.வடதொரசலூா் கிராமத்தைச் கிராமத்தைச் சோ்ந்த திவ்யா, பிரபாவதி, வெற்றிவேல், 10 மற்றும் 5 வயது சிறுமிகள் உள்ளிட்ட 6 போ் கடந்த 3 நாள்களுக்கு முன்பு எலிக் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், கொள்ளை நோய்கள் மாவட்டத் தடுப்பு அலுவலா் மருத்துவா் பங்கஜம், பூச்சியல் வல்லுநா் சுப்பிரமணியன், தியாகதுருகம் வட்டார மருத்துவ அலுவலா் ஸ்ரீராம் தலைமையிலான சுகாதாரத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கிராம மக்களுக்கு குடிநீா் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், கௌதம், பாரதி ஆகியோா் உடனிருந்தனா்.
Next Story