வருவாய்த் துறையினர் பார்வையிட்டு ஆய்வு
வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு
நத்தம் பகுதியில் மழைக்கு மின் கம்பம், வீடுகள் சேதம் குறித்து வருவாய்த் துறையினர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் திடீரென காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, மேலமேட்டுப்பட்டியில் காற்று மற்றும் மழையால் சுந்தரி என்பவரின் ஓட்டு வீடு, பொன்னுச்சாமி என்பவரது மாட்டு கொட்டகை, அப்பாஸ் என்பவரது கடை ஆகியவைகள் பலத்த சேதம் அடைந்தது.
மேலும் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சார வயர்களை அறுந்து தொங்கின. இதனால் அப்பகுதி பாதிப்புக்கு உள்ளானதையடுத்து செல்லப்ப நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சரவணன், உதவியாளர் சுப்புராஜ் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று சேதங்களை பார்வையிட்டு அவற்றை மதிப்பீடு செய்து நத்தம் வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர்.
Next Story