வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

சென்னை இராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி, இராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

இந்த ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) ஜெய சந்திர பானு ரெட்டி,தேர்தல் நடத்தும் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, கூடுதல் காவல் ஆணையாளர் கபில் குமார் சரட்கர், இணை காவல் ஆணையாளர் (கிழக்கு) ஜி.தர்மராஜன், துணை காவல் ஆணையாளர் (மயிலாப்பூர்) ராஜாட் சதுர்வேதி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்

Tags

Read MoreRead Less
Next Story