மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி நிர்வாகதுறை, சுகாதாரதுறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை நீர்விநியோகத்துறை, மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து துறைகளின் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்கள் அடங்கிய டெங்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்கள், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நிலவிவரும் காய்ச்சல் பற்றிய கருத்துக்களை சமர்ப்பித்து, டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பது பற்றிய விளக்கங்களையும் எடுத்து கூறினார்.
மேலும் டெங்கு காய்ச்சல் நடவடிக்கைகளில் பரவாமல் தடுப்பதற்குரிய மஸ்தூர் பணியாளர்களை பணியமர்த்துவது, உள்நோயாளிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் பகுதிகளில் முதிர்ந்த கொசுக்களை அழிக்க முறையான அடிப்படையில் புகை மருந்து அடிப்பது மற்றும் குடிநீர் விநியோகம் முறையாக வழங்குவது பற்றியும், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி சுற்றியுள்ள பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பது பற்றியும் எதிர்வரும் காலங்களில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்கு வேண்டிய முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்தும் வகையில் பணிபுரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.