திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்
X

ஆய்வு கூட்டம் 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரூப் 4 தேர்வு வரும் ஞாயிறு ஜூன் 9 அன்று நடைபெற உள்ள நிலையில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு வரும் ஞாயிறு ஜூன் 9 அன்று நடைபெற உள்ள நிலையில் அதிகாரிகளுடன் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 994 மாணவ மாணவிகள் 99 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளை கண்காணிக்கும் வகையில் ஐந்து பேர் கொண்ட பறக்கும் படை 27 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர்.

இந்த 99 மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் வட்டாட்சியர் நிலை அளவிலான அலுவலர்கள் கண்காணிக்க உள்ளனர். மேலும் துணை ஆட்சியர் நிலையிலான நான்கு அலுவலர்களும் இதே போன்ற பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வனைத்து பணிகளையும் கண்காணிக்கும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலரும் சென்னை டிஎன்பிசி தேர்வாணையம் மூலம் மூன்று அலுவலர்கள் கண்காணிக்கும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளை மேற்கொள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் அரசு வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விளக்கத்தினை பயிற்சி பெற்ற அலுவலர் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது. கு

றிப்பாக இத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து சேவையை தேர்வு நடைபெறும் நாள் அன்று காலை முதலே தங்கு தடை இன்றி ஏற்படுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவசர மருத்துவ உதவிக்கு இரண்டு மருத்துவ குழு தயார்படுத்த மாவட்ட பொது சுகாதாரம் துறை இணை இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வுக்கு கூட்டம் மற்றும் பயிற்சியில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வு பணியில் ஈடுபட உள்ள அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களும் பங்கு பெற்றனர்.

Tags

Next Story