அய்யங்குள புனரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் பணி ஆய்வு

அய்யங்குள புனரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் பணி ஆய்வு
அமைச்சர் ஆய்வு 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அய்யங்குளத்தில் தூய்மை அருணை அமைப்பு சார்பாக நடைபெற்று வரும் புனரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தி அழகுப்படுத்தும் பணிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இக்குளத்தில் கார்த்திகை மாதத் தீபத் திருவிழா நிறைவு பெற்ற பின் அண்ணாமலையார் தெப்ப உற்சவம் நடைபெறும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு இக்குளக்கரைக்கு வருகிறார்கள். இந்தக் குளமானது 3 ஏக்கர் பரப்பளவில், 360 அடி நீளமும் 360 அடி அகலமும், 32 அடி ஆழம் மற்றும் 32 படிகட்டுகள் உள்ளன. இக்குளத்தினை சுற்றி பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் முடியம் தருவாயில் உள்ளது. குளத்தில் நிரப்பட்டுள்ள நீர் தூய்மையான முறையில் உள்ளனவா என்று ஆய்வு செய்தார். அதுமட்டுமில்லாமல் குளத்தின் நான்குபுறங்களிலும் சிறப்பான முறையில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. தூய்மை அருணை அமைப்பு சார்பில் பல்வேறு அடிப்படை சீரமைத்தல் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களில் திருக்கோயிலின் பெருமைகளை அறியும் வகையில் திருபாவை, திருக்குறள் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டதை பார்வையிட்டார். மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி(செங்கம்),மாநில தடகள் தடகள சங்க துணை தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, உதவி பொறியாளர் முகில், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பாளர் வாரியம் இரா.ஸ்ரீதரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை அருணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story