துப்புரவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு

குமாரசாமிபேட்டை பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு தேசிய தூய்மைப் பணியார்கள் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.
தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தருமபுரி நகராட்சிக்குட்டபட்ட குமாரசாமிபேட்டை தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு மேற்கொண்டுள்ள அடிப்படை வசதிகள், அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களை கேட்டறிந்தார். தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தூய்மைப் பணியாளர்கள் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி நகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான சம்பளம் ,இ எஸ் ஐ, ஈ பி எப், பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ சேவைகள், இன்சூரன்ஸ் வசதி ஆகியவை முறையாகவும் ,உரிய நேரத்திலும் வழங்கிட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், தொழில்முனைவோர் திட்டங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு, தொழில் மானியங்கள் வழங்கிட வேண்டும். இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது நகராட்சி ஆணையர் அண்ணாமலை நகராட்சி ஆய்வாளர் ராஜரத்தினம் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story