கெங்கவல்லியில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு !
தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில், தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லியில், தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.சேலம் மாவட்டத் தில் உள்ள ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் ஏற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கள்ளக்குறிச்சி நாடா ளுமன்றத் தொகுதியில் அடங்கியுள்ளன. இப்பகுதிக்கென தேர்தல் செலவின பார்வையாளராக மனோஜ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இதுவரை செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து கேட்டறிந் தார். பொதுமக்கள் ₹50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது உள் ளிட்ட அறிவுரைகளை வழங்கி னார். ஆய்வின் போது கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன், ஆத்தூர் டி.எஸ்பி சதீஷ்குமார் செல்னின தேர்தல் அலுவலர் லிங்கேஸ்வரி, தேர்தல் அலுவலர் பரசுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story