தர்மபுரி கோட்டாட்சியர்,வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு

தர்மபுரி கோட்டாட்சியர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று தேர்தல் சம்பந்தமாக செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் செலவின கணக்கிட்டு குழு மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் பிரமோத் நாயக், மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களிடம் கலந்துரையாட உள்ளனர்.

Tags

Next Story