மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை
விக்கிரவாண்டியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடக் கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13- ந் தேதி எண்ணப்படுகிறது. இத்தேர்தல் நடைபெறும் 275 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவி கள், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான அங்குள்ள தாலுகா அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த எந்திரங்கள், வாக்குப்பதிவிற்கு முன்பு நல்ல நிலையில் உள்ளதா என முதல்கட்ட பரி சோதனை செய்யும் பணி நடந்து வருகிறது.
இப் பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்து வருகின்றனர். இப்பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியை விரைவாக முடித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நல்ல முறையில் பயன்படுவதை உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.