நாகையில் மீன் பிடி விசைப்படகுகள் மின்வளத்துறை அதிகாரிகளால் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் 24.05.2024 அன்றும் நாட்டுப்படகுகள் அனைத்தும் 10.06.2024 அன்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) பேபிதகவல் தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலன்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி கலன்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் 24.05.2024 அன்றும் நாட்டுப்படகுகள் அனைத்தும் 10.06.2024 அன்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. படகு உரிமையாளர்கள் ஆய்வு நாளான்று படகினை தங்களது பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்தில் நிறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீன்பிடிகலன்களில் பதிவெண் தெளிவாக தெரியும் வண்ணம் எழுதி இருத்தல் வேண்டும் மற்றும் மீன்பிடி கலன்களுக்கு வரையறுக்கப்பட்ட வண்ணக்குறியீட்டில் படகானது இருத்தல் வேண்டும்.
ஆய்வுசெய்யும் நாளில் படகின் பதிவு சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீடு உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் பாஸ் புத்தகம் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைதொடர்பு கருவிகள் மற்றும் கடற்பயன பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றினை ஆய்வு குழுவினரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் ஆய்வில் காண்பிக்கப்படாத விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு விற்பனை வரி வரிவிலக்களிக்கப்பட்ட மசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன் அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி அப்படகுகளின் பதிவு சான்று உரிய விசாரணைக்குப்பின் இரத்து செய்யப்படும்.
ஆய்வு நாளன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் படகினை ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளரின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. எனவே அனைத்து மீன்பிடி கலன்களையும் ஆய்வுக்கு உட்படுத்திட படகு உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.