குழந்தைகள் காப்பகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
நாகப்பட்டினத்தில் செயல்பட்டுவரும் அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் வழங்கப்பட்ட சுண்டலில் வண்டுகள் இருந்ததாக வரப்பட்ட புகாரையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு இடங்களும் உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்று பெற்றுள்ளன. சமையலறை மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டிருந்தன.
தேவையான அளவு உணவு மாதிரி எடுத்து வைக்கவும், உணவை கையாளும் நபர்கள் தன் சுத்தம் கடைபிடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. குழந்தைகள் காப்பகத்தில் இருப்பு வைப்பு அறையில் இருந்த சுண்டல் மற்றும் அரிசியில் வண்டுகள் காணப்பட்டன. உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டது. இனிவரும் காலத்தில் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது உணவு தயாரிப்பு மூலப்பொருட்கள் வாங்கி பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்த குழந்தைகளிடம் உணவு வழங்குவது குறித்து பேசப்பட்டது. உணவில் குறைபாடுகள் இருந்தால் 9444042322 என்ற உணவு பாதுகாப்பு ஆணையத்தின் வாட்ஸ்அப் புகார் எண்ணில் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது முனைவர் இரா.வினோதினி குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் உடன் இருந்தார். -