கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்துகள் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்துகள்  ஆய்வு

பைல் படம் 

கள்ளக்குறிச்சி அரசு டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் ஆய்வு பணி நடந்தது.

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக கள்ளக்குறிச்சி அரசு டெப்போக்களில் இருந்து 69 பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும், மாவட்டத்திற்குள் உள்ள கிராம பகுதிகளுக்கு 30 பஸ்கள், முன்னெச்சரிக்கையாக 9 பஸ்கள் என மொத்தமாக 108 பஸ்கள் கள்ளக்குறிச்சி அரசு டெப்போக்களில் உள்ளன. தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவின்பேரில், அரசு பஸ்கள் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பஸ்சின் தரைத்தளம், படிக்கட்டுகள், இருக்கைகள், மேற்கூரை, லைட்டுகள், பிரேக், பஸ்கள் சரியான தேதியில் பழுது நீக்கி பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் தலைமையகம் மற்றும் சங்கராபுரம் அரசு டெப்போவில் பணிபுரியும் துணைமேலாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story