மருகல் அருகே மல்லிகை பூ சாகுபடி பணி ஆய்வு

மருகல் அருகே மல்லிகை பூ சாகுபடி பணி ஆய்வு

நாகை மாவட்டம் மருகல் அருகே மல்லிகை பூ சாகுபடி பணிகளை உதவி தோட்டக்கலை அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.


நாகை மாவட்டம் மருகல் அருகே மல்லிகை பூ சாகுபடி பணிகளை உதவி தோட்டக்கலை அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

நாகை மாவட்டம் மருகல் அருகே மல்லிகை பூ சாகுபடி பணிகளை உதவி தோட்டக்கலை அலுவலர் ஆய்வு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி கயத்தூர் பகுதியில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் மணிவண்ணன் என்ற விவசாயிக்கு வழங்கப்பட்ட மல்லிகை பூ செடிகளை அரை ஏக்கர் நிலப்பரப்பில் 600 செடிகளை வைத்து சாகுபடி செய்து வருகிறார்.

இந்த சாகுபடி பணிகளை திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது உதவி தோட்டக்கலை அலுவலர் கூறுகையில்:- விவசாயிகள் நெல்,பருத்தி,உளுந்து,பயிருக்கு மாற்று பயிராக அதிகம் லாபம் ஈட்டக்கூடிய தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் எனவும்,100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட மல்லிகை பூ செடிகளில் விவசாயிகள் நாள் ஒன்றுக்கு 8 கிலோ முதல் 10 கிலோ வரை அறுவடை செய்யப்படுவதாகவும் ஒரு கிலோ பூ 400 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் வீட்டிற்கு வந்து எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார்.மேலும் விவசாயிகள் தங்கள் முன்வந்து தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story