கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு

கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் திட்ட பணிகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ஓடக்கூடிய அகண்ட காவிரி ஆக இருக்கும் காவிரி ஆற்றில் பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு நஞ்சை,புகழூரில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் துவக்கப்பட்டது.

இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையிலான அரசுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று, குடிநீர் திட்ட பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மற்றும் பொதுப்பணித்துறை, அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story